147வது பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு திமுகவினர் மரியாதை
திருவாரூர், செப்.18: பெரியாரின் 147வது பிறந்தநாளையொட்டி திருவாரூரில் அவரது உருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளையொட்டி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானாவில் இருந்து வரும் பெரியாரின் உருவ சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டிகலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் தி.க. மாவட்ட துணைத்தலைவர் அருண் காந்தி, திமுக நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் திருவாரூர் எம்எல்ஏ அலுவலகம் மற்றும் திமுகவின் நகர அலுவலகம் ஆகியவற்றிலும் பெரியாரின் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மைய மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் பெரியார் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.