பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு திமுகவினர் மரியாதை
Advertisement
திருவாரூர், செப்.16: அண்ணாவின் பிறந்த நாளையொட்டி திருவாரூரில் அவரது உருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. .
திருவாரூரில் நகர திமுக அலுவலகம் எதிரே இருந்து வரும் அண்ணாதுரையின் உருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் எம்.எல்.ஏ தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தாட்கோ தலைவர் இளையராஜா, நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஓரணியில் தமிழ்நாடு குறித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Advertisement