சனி தோறும் வலங்கைமான் பகுதியில் சம்பா சாகுபடி விதைப்பு பணியில் விவசாயிகள் மும்முரம்
Advertisement
வலங்கைமான், செப்.15: வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சம்பா சாகுபடி மேற்கொள்வதற்கு விதை விடும் பணி சுமார் 50 சதவீதம் நிறைவு.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகின்றது.
நடப்பாண்டு சுமார் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் நேரடி விதைப்பு மூலம் சுமார் 40
சதவீதஹெக்டேர் நிலப்பரப்பும் இயந்திர நடவு மூலம் சுமார் 25சதவீத ஹெக்டேர் நிலப்பரப்பும்வழக்கமான விதை விட்டு கை நடவு மூலம் சுமார் 35 சதவீத ஹெக்டேர்நிலப்பரப்பும்சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது .
Advertisement