திருத்துறைப்பூண்டியில் மரக்கன்று நடும்பணி
Advertisement
திருத்துறைப்பூண்டி, அக் 14: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரை பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும்பணியை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறும் போது: வனபரப்பை 33 சதவீதமாக உயர்த்தவும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் மரம் நடுவது அவசியம். இந்தாண்டு நகர் முழுவதும் மரம் நட திட்டமிடப்பட்டுள்ளது, இப்பணி பாலம் சேவை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் என்றார். நூற்றி ஏழு மரங்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் மாரிசாமி, பாலம் செந்தில்குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள். தன்னார்வலர்கள் கலந்துக்கொண்டனர்.
Advertisement