சாலையில் பனி மூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் ஹாஜி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
திருவாரூர், அக்.14: திருவாரூர் மாவட்டத்தில் ஹாஜிபணியிடத்திற்கு தகுதியுடைய இஸ்லாமிய சமூகத்தினர் வரும் 17ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் காஜிபணியிடத்திற்கு தகுதியுடைய இஸ்லாமியர்களிடமிருந்து விண்ணப்பிக்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி தகுதியுடைய விண்ணப்பத்தாரர் ஆலிம் அல்லது பாசில் கல்வியை முடித்தவராகவே இருத்தல் வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரபிக் கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவோ அல்லது ஆசிரியராகவோ பணிபுரிபவராக இருத்தல் வேண்டும். இஸ்லாமிய மதத்தின் ஷரியத் எனும் இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் விதிகளை நன்கு அறிந்தவராக இருத்தல் வேண்டும். மேற்காணும் தகுதிகளையுடைய இஸ்லாமியர்கள் தங்களது விண்ணப்பங்களை கலெக்டருக்கு முகவரியிட்டு வரும் 17ந் தேதிக்குள் பதிவு அஞ்சலிலோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் 2ம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட சிறுபான்மையினர் நலஅலுவலகத்தில் நேரடியாகவோ அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.