திருத்துறைப்பூண்டியில் சீத்தாராம் யெச்சூரி நினைவு தினத்தில் உடல் தானம்
திருத்துறைப்பூண்டி, செப்.13: சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் உடல் தானம் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் உடல் தானம் வழங்கும் தொடக்க நிகழ்ச்சியும், நகர குழு சார்பில் நடைபெற்றது.
Advertisement
நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கோபு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரகுராமன், ஜோதிபாசு மூத்த தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர் சாமிநாதன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ்,நகர்மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் ,நகர ஒன்றிய குழு உறுப்பினர்கள் தமிழ்மணி ,கோதாவரி, வீரசேகரன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement