திருவாரூரில் கல்விக் கடனுக்கான விழிப்புணர்வு முகாம்
திருவாரூர், செப்.13: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் கல்விக்கடனுக்கான விழிப்புணர்வு முகாம் வரும் 17ந் தேதி நடைபெறுவதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முதன்மை வங்கி இணைந்து வரும் 17ந் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் கல்விக்கடனுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது.
மேற்படி கல்விக்கடன் முகாமில் அனைத்து வங்கியாளர்கள் கலந்துகொண்டு கல்விக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் வங்கி கடன் பெறுவதற்கு தகுதியானவரா என்பதனை உறுதிசெய்வதற்கு ஏதுவாக மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி கல்வி கட்டண விவரம், ஆதார் அட்டை, பான் கார்டு ஆகிய ஆவணங்களுடன் அவர்தம் பெற்றோர்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.