பொதக்குடியில் கிராம சபைக் கூட்டம்
நீடாமங்கலம், அக்.12: நீடாமங்கலம் அருகே உள்ள பொதக்குடியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஷாகிர் உஷேன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் பால்ராஜ் தீர்மானங்களை படித்து வரவேற்றார். ஒன்றிய பற்றாளராக இளநிலை உதவியாளர் சேரன் கலந்து கொண்டார். மேலும், கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர், தூய்மை பணியாளர்கள், பொதக்குடி நண்பர்கள்குழு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அப்போது, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நூர்யா தெரு-அகமதியா தெரு சிமெண்ட் சாலை அமைப்பது, தெரு விளக்குகளை சீரமைப்பது, தெருகளில் சுற்றி திரியும் தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளை அப்புறப் படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொதக்குடி நண்பர்கள் குழுவினர் உள்ளிட்ட பொது மக்கள் சார்பில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது. ஷாகுல்ஹமீது நன்றி கூறினார்.
Advertisement
Advertisement