திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் அரசு விரைவு பேருந்து இயக்க வேண்டும்
திருத்துறைப்பூண்டி, அக்.12: திருத்துறைப்பூண்டியிலிருந்து பகல் நேரத்தில் அரசு விரைவு பேருந்து (ஏசி) இயக்கம் வேண்டும் எனதிருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து போக்குவரத்துத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தார்,சென்னையில் அமைச்சரை சிவசங்கரை நேரில் சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது; திருத்துறைப்பூண்டியிலிருந்து அரசு விரைவு பேருந்துகள் (ஏசி) இரவு நேரங்களில் சென்னைக்கு இயக்கம் செய்யப்படுகிறது. பகல் நேரங்களிலும் இயக்கம் செய்ய வேண்டும். கோட்டூரிலிருந்து சென்னைக்கு அரசு விரைவு பேருந்து (ஏசி) தினந்தோறும் இரவு நேரங்களில் இயக்க வேண்டும். திருத்துறைப்பூண்டியிலிருந்து பழனி, திருச்செந்தூருக்கு தினசரி பேருந்து இயக்கம் செய்யப்பட வேண்டும். மேற்கூறப்பட்டுள்ள வழிதடங்களில் புதிய பேருந்துகள் இயக்க உரிய அனுமதிகள் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.