முத்துப்பேட்டை தில்லைவிளாகத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
முத்துப்பேட்டை,செப்.12: முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகத்தில் இன்று நடைபெறுகிறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் பயன்பெற அழைப்பு. திருவாரூர் மாவட்டத்திலும் நகர்புறப்பகுதிகளில் மற்றும் ஊரகப்பகுதிகளில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
இதில் இருப்பிட சான்று, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று, பட்டா பெயர்மாற்றம், மின் இணைப்பு பெயர்மாற்றம், ஜாதி சான்று உள்ளிட்ட பல்வேறு மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துப்பேட்டை வட்டாரத்தில் இந்த முகாமானது இன்று (12ந்தேதி) தில்லைவிளாகம் பல்நோக்கு பேரிடர்மேலாண்மை மையக் கட்டிடத்தில் நடைபெறுகிறது. அதனால் சம்மந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என வருவாய்த்துறையினர் கூறினர்.