ஊதிய உயர்வு வழங்க கோரி சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர், செப்.12: ஊதிய உயர்வு வழங்கிட கோரி சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மக்களை தேடி மருத்துவ பணியில் ஈடுப்பட்டு வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ 20 ஆயிரம் வழங்கிட வேண்டும், ஊக்க மதிப்பெண் வழங்கிட வேண்டும்.
Advertisement
ஆய்வாளர் நிலை 2க்கான காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பாக மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Advertisement