வலங்கைமானில் புறவழிச்சாலை பணி தொடங்க கோரிக்கை
வலங்கைமான், செப். 12:கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் வலங்கைமான் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிப்பதற்கு ஏற்ற வகையில் கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை பணி தொடங்குமா பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா செம்மங்குடி பகுதி வரை புறவழிச்சாலை அமைப்பதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டதால்இப்பகுதியில் சாலை அகலப்படுத்தப்படவில்லை.
Advertisement
இருப்பினும் புறவழிச்சாலை பணிகள்கடந்த சில ஆண்டுகளாக துவங்கப்படாமலே உள்ளது. எனவேமுன்னதாக திட்டமிடப்பட்டகும்பகோணம் மன்னார்குடி சாலையில் வலங்கைமான் கடைவீதிப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மாடா குடி பகுதியில் இருந்து செம்மங்குடி வரை புறவழிச்சாலை பணிகளை துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
Advertisement