திருத்துறைப்பூண்டி பள்ளி, கல்லூரிகளில் எஸ்எப்ஐ உறுப்பினர் சேர்க்கை
திருத்துறைப்பூண்டி, செப்.11:அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் உறுப்பினர் சேர்க்கை பள்ளி கல்லூரிகளிலும் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் கல்லூரி கிளை பொறுப்பாளர் துரைமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
Advertisement
இந்த கல்வியாண்டிற்கான உறுப்பினர் பதிவு இயக்கம் செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கி 18 தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக உறுப்பினர் அட்டையினை மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தனர்.
Advertisement