மன்னார்குடியில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
மன்னார்குடி, செப். 11: மன்னார்குடி காவல் உட்கோட்டத்திற்கு புதிய டிஎஸ்பியாக மணிவண்ணன் நேற்று பொறுப்பெற்று கொண்டார். மன்னார்குடி டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பிரதீப் மாவட்ட குற்றப்பிரிவு (2) டிஎஸ்பியாக பணிமாறுதலில் திருவாரூருக்கு சென்றதையடுத்து, சென்னை எம்கேபி நகர் உதவி ஆனையராக பணியாற்றி வந்த மணிவண்ணன் மன்னார்குடி புதிய டிஎஸ்பி யாக பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து, மன்னார்குடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களை சேர்ந்த இன்ஸ் பெக்டர்கள், எஸ்ஐக்கள், எஸ்எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் டிஎஸ்பி மணிவண்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Advertisement
Advertisement