முத்துப்பேட்டையில் புது வீட்டில் 2மின் மோட்டர்கள் திருட்டு
முத்துப்பேட்டை,அக்.10: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஓடக்கரை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் இவர் பிரான்ஸ் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான புதிய வீடு கட்டுமானப்பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலை முடிவிட்டு நேற்று காலை மீண்டும் வேலைக்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த இரண்டு மின் மோட்டர்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கட்டிடத்தின் ஒப்பந்தக்காரரான கோவை கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகதீசன்(45) முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சப்.இன்ஸ்பெக்டர் ராகுல் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவை பார்த்தபோது இரு வாலிபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருடி சென்ற இரு வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.