கொரடாச்சேரி அருகே விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யக் கோரி சாலை மறியல்
நீடாமங்கலம். ஆக.9: கொரடாச்சேரி அருகே கீழ முகுந்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசாமி மகன் பால முருகன்(45) இவர் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் பைக்கில் வந்த நபர் மோதி விபத்துக்குள்ளாக்கியதில் பலத்த காயம் அடைந்த பாலமுருகன் திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இறந்துவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கொரடாச்சேரி போலீசில் சி.சி.டி.வி. புட்டேஜுன் புகார் கொடுத்து இரண்டு நாட்களுக்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து கீழ முகுந்தனூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனை அறிந்த திருவாரூர் போலீஸ் டிஎஸ்பி மற்றும் வருவாய்த் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்து ஏற்படுத்திய நபரை விரைவில் கைது செய்து விடுவோம் என உறுதிகூறியதன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.