முத்துப்பேட்டையில் காவல்துறை சார்பில் ஹெல்மெட் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
முத்துப்பேட்டை, ஆக்.7: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் காவல்துறை சாரபில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணரவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணரவு நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை காவல் நிலையம் சப். இன்ஸ்பெக்டரகள் ராகுல், சிங்காரவடிவேல் ஆகியோர கலந்துக்கொண்டு வாகன ஒட்டிகளிடம் மத்தியில் பேசுகையில், ஹெல்மெட் அணிவதால் சாலை விபத்திலிருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்ளமுடியும்.
வீட்டில் ஒரு உயிர இழப்பு என்பது யாராலும் ஈடு செய்ய முடியாத செயல் அதனால் கண்டிப்பாக ஹெல்மெட் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதிவேக பயணம் செய்யக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டக்கூடாது. முறையாக அனைத்து வாகனங்களுக்கும் ஆவணங்கள் இருக்கவேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று கூறினார. இதனை வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஆரவத்துடன் கேட்டறிந்தனர.