திருத்துறைப்பூண்டி நகராட்சியில் வாக்காளர் பட்டியல் திருத்த படிவங்கள் வழங்கும் பணி
திருத்துறைப்பூண்டி, நவ. 6: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் வாக்காளர் பட்டியல் திருத்த படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்றது.திருத்துறைப்பூண்டி 166 (அவ)சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணி தொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் அமுதா தலைமையில் திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சிரஞ்சீவி ராஜா, நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், மேலாளர் கார்த்திகேயன் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்குசாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் வாக்காளர் பதிவு அலுவலர் அமுதா வாக்கு சாவடி நிலைய அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியல் திருத்த படிவங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் (கிட்) அடங்கிய பையை வழங்கினார்.