திருமக்கோட்டை அருகே பாலையைக்கோட்டையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் 1400 பேருக்கு சிகிச்சை
மன்னார்குடி, நவ.5: திருமக்கோட்டை அருகே பாலையைக்கோட்டையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் 1400 பேருக்கு சிகிச்சை பெற்றனர். கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில், திருமக்கோட்டை அடுத்த பாலையைக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக் கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் கோட்டூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலசுந்தரி, தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 1400 நபர்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகளைஅளித்தனர்.
முகாமில், திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் அசோக், இணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் திலகவதி, துணை இயக்கு நர் (காசநோய்) டாக்டர் புகழ், கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தேவதாஸ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கலைவாணி மோகன், மாவட்ட பிரதிநிதி வேதாச்சலம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மலர்மன்னன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.