கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கல்
முத்துப்பேட்டை, ஆக.5: கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர், பிரிண்டர், ஸ்கேனர், ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியை வனிதா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சாசன தலைவர் கிருஷ்ணமூர்த்தி கலந்துக்கொண்டனர்.இதில் முன்னாள் தலைவர் சிதம்பர சபாபதி சகோதரர் பாண்டியன் குடும்பத்தினரால் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர், பிரிண்டர், ஸ்கேனர், ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் செயலாளர் அந்தோணி ராஜா, பொருளாளர் ராஜசேகர், முன்னாள் தலைவர்கள் கோவி.ரெங்கசாமி, ராஜமோகன் கண்ணதாசன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆசிரியைகள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.