நீடாமங்கலம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நலதிட்ட உதவி
நீடாமங்கலம்,அக்,4:நீடாமங்கலம் பேரூராட்சி சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கலெக்டர் பங்கெற்றார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியில் 9 முதல் 15 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நீடாமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு பேரூராட்சி தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார் .துணைத் தலைவர் ஆனந்தமேரி ராபர்ட் ப்ரைஸ் செயல் அலுவலர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர்.
முகாமில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் கலந்து கொண்டு பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு வீட்டு வரி சீட்டு ஒருவருக்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கல் 2 நபருக்கும்,வருமானச் சான்று ஒரு நபருக்கும், மின் இணைப்பில் பெயர் மாற்றம் ஒரு நபருக்கும் ஆன சான்றுகளை வழங்கினார், முகாமில்மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, சித்தமல்லி தமிழ் சிற்பி,வார்டு உறுப்பினர்கள் திருப்பதி, அய்யா பிள்ளை மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கமாலுதீன் , இளைஞர் அணி காந்திமணி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.