மன்னார்குடி அருகே மின்கம்பத்தில் பைக் மோதி கார் டிரைவர் பலி
மன்னார்குடி, அக். 4: மன்னார்குடி அருகே மின்கம்பத்தில் பைக் மோதி கார் டிரைவர் பலியானார். மன்னார்குடி அடுத்த வடக்கு தென்பரை கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வேந் திரன் (55). கார் டிரைவர். இவர் கடந்த 29ம் தேதி மதியம் பைங்காநாட்டில் இருந்து பைக்கில் ஊருக்கு சென்றார். ராதாநரசிம்மபுரம் பாலம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பைக் மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில், பலத்த காயமடைந்து கீழே விழுந்து கிடந்த அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக இறந்த செல்வேந்திரனின் மனைவி வளர்மதி திருமக் கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.