முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா
முத்துப்பேட்டை,அக்.28: முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலாண்டு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2025-26 காலாண்டு தேர்வில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமுத்ராசு தலைமை வகித்தார்.
இதில் உதவி தலைமை ஆசிரியர் கவிதா, ஆசிரியர்கள் நித்தியா, அனிதா, பூவிழி, காந்திமதி, லட்சுமி, ராஜேஸ்வரி, மகேஸ்வரி, இளவரசி, குமார், மணிகண்டன், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி சான்றிதழும் பரிசுகளும் வழங்கி பாராட்டப்பட்டது.
இதில் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் கலையாசிரியர் குமார் நன்றி கூறினார்.