கட்டிமேடு அரசுப் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
திருத்துறைப்பூண்டி, அக். 26: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மு.ச. பாலு தலைமை வகித்தார் .முன்னதாக ஆசிரியை தனுஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகப்பட்டினம் சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி பேராசிரியர் நவீன் கலந்து கொண்டு பேசும்போது போட்டித் தேர்வுகளில் மாணவ, மாணவிகள் எவ்வாறு பங்கு பெறுவது குறித்து விளக்கம் அளித்தார். மேலும் ஜேஇஇ, நீட் போன்ற உயர் கல்விக்கு மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார் செய்வது குறித்தும் பல்வேறு விளக்கங்களை தெளிவாக விளக்கினார். மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்குப் பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம் எந்த துறையில் தங்களின் உயர் கல்வியை தொடரலாம் என்பதற்கு உதவும் வகையில் கையெடுகள் வழங்கப்பட்டன.
மேலும் தொலைதூரக் கல்வி குறித்த விவரங்கள் மற்றும் உயர் கல்வி தொடருவதற்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. உயர் கல்வி பற்றிய மாணவர்களின் சந்தேகங்களுக்கு நிர்வாக அலுவலர் சீனிவாசன் விளக்கமாக பதில் அளித்தார். நிறைவாக ஆசிரியை ரேணுகா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.