திருத்துறைப்பூண்டி பாரதமாதா சேவை நிறுவனம் சார்பில் சாலை ஓரங்களில் உள்ளவர்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி
திருத்துறைப்பூண்டி,அக்25: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாரதமாதா சேவை நிறுவனத்தின் சார்பில் சாலை ஓரங்களில் உள்ளவர்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் சாலை ஓரத்தில் காய்கறி வியாபாரம், கருவாடு வியாபாரம் செய்யும் ஏழை விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு வடகிழக்கு பருவமழை பாதிப்பிலிருந்து தங்களை மீட்டுக் கொள்வதற்காக ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள 100 ஆர்கானிக் பருத்தி நூல் போர்வைகள் திருத்துறைப்பூண்டி பாரதமாதா சேவை நிறுவனம், திருத்துறைப்பூண்டி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு இந்திய நெட் கிராஸ் சொசைட்டியின் செயலாளர் எடையூர் மணிமாறன் தலைமை வகித்தார். பாரதமாதா சேவை நிறுவன திட்ட இயக்குனர் சங்கீதா மணிமாறன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் டெல்டா லாட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் மாணிக்கம், பாரதமாதா அலுவலக உதவியாளர்கள் பாலரூபன், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் முன்னதாக பாரதமாதா சேவை நிறுவனத் திட்ட ஒருங்கிணைப்பாளர் துர்கா தேவி வரவேற்றார். முடிவில் களப்பணியாளர் குமார் நன்றி கூறினார்.