திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால்
Advertisement
திருத்துறைப்பூண்டி, செப்.24: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் ஏற்கனவே இருந்த மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு இருந்தது, பின்னர் காலப்போக்கில் ஆக்கிரப்பு செய்யப்பட்டதால் சிறிய மழை பெய்தால் கூட நகரில் மழை நீர் தேங்கி நிற்கும் இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். பொதுமக்கள், கவுன்சிலர் கோரிக்கை அடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் 15 இடங்களில் 6.045கிலோமீட்டருக்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Advertisement