திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
Advertisement
திருத்துறைப்பூண்டி, ஆக.19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன்கோட்டகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை கராத்தே பயிற்சி தொடங்கப்பட்டது.ஆசிரியர் மெய்யநாதன் தலைமை வகித்தார். ஆசிரியை இந்துமதி வரவேற்றார், தலைமை ஆசிரியர் கோதண்டராமன் கராத்தே பயிற்சி தொடங்கி வைத்து மாணவிகளுக்கு தற்காப்பு கலை அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார், பயிற்சியாளர் முத்துக்குமரன் தலைமையில் பயிற்சியாளர் குமரகுருபரன் மாணவிகளுக்கு தற்காப்பு கலை கராத்தே பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியானது மாணவிகளுக்கு மூன்று மாதங்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது, முடிவில் ஆசிரியர் தனபால் நன்றி கூறினார்.
Advertisement