முத்துப்பேட்டை அருகே பெண்கள் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
முத்துப்பேட்டை, ஆக.12: சுவாமி தயானந்தா சரஸ்வதி கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற முத்துப்பேட்டை அருகே பெண்கள் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே கோவிலூர் பெரியநாயகி பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் 14 பேர் திருவாரூர்அடுத்த மஞ்சக்குடி சுவாமி தயானந்தா சரஸ்வதி கலைக்கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். சுமார்ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துக்கொண்ட இந்த போட்டியில் 11ம் வகுப்பு மாணவி துர்கா தேவி கட்டுரை போட்டியில் கலந்துக்கொண்டு முதலிடம் பெற்றார்.
மேலும் அதற்கு ஊக்க தொகையாக ஆயிரம் ரூபாய் பரிசும் பெற்றார். இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவி மற்றும் கலந்துக்கொண்ட மாணவிகளையும் இதற்கு தயார் செய்த ஆசிரியைகள் ஜெயந்தி, அன்பரசி ஆகியோரையும் தலைமையாசிரியர் வனிதா மற்றும் ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.