திருத்துறைப்பூண்டி அருகே மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் கலெக்டர் ஆய்வு
Advertisement
திருத்துறைப்பூண்டி, டிச. 9: டிட்வா புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சேதமடைந்தன. வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி அருகே பிச்சன்கோட்டகம், கட்டிமேடு பகுதியில் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டார். சேத விவரங்கள் குறித்தும் விரைவாக பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார், ஆய்வின் போது வேளாண்மை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement