பழைய கட்டிம் இடிக்கப்பட்ட இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டும்
வலங்கைமான்,டிச.6: வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் பயன்பாட்டில் இல்லாத ஊராட்சி ஒன்றிய அலுவலக குடியிருப்பு கட்டிடம் இடித்த பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையினருக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்ட ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இவ் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கீழ் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவ்ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் வசிக்கும் வகையில் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட உப்பு கார தெரு பகுதியில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டது.இக்கட்டிடங்கள் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கட்டிடத்தில் வசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.