திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் பள்ளியில் 75 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்
Advertisement
திருத்துறைப்பூண்டி,டிச.6: திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் பள்ளியில் 75 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியை கலைச்செல்வி தலைமையில், ஆசிரியர் துரைராஜ், முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஆசிரியர் சிங்காரவேலு வரவேற்றார். நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து, நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு 11ஆம் வகுப்பில் பயிலும் 75 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினர். முடிவில்ஆசிரியர் பாலாஜி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியைகள், அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Advertisement