தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Advertisement
திருவாரூர்,டிச.5: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி திருவாரூரில் நேற்று மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஊர் புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம் பெற்று வருபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுவதை கைவிட வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும்,
Advertisement