ஒன்றிய அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
திருவாரூர், டிச. 2: ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் பல ஆண்டுகளாக போராடி பெற்ற 44 தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்பாக சுருக்கி தொழிலாளர்களின் வர்க்கத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்தும், இந்த 4 சட்டங்களையும் திரும்பப்பெற்று மீண்டும் 44 சட்டங்களை அமல்படுத்த கோரியும் திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். வட்ட தலைவர் குமார் தலைமையிலும், வட்ட செயலாளர் தம்பிதுரை முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், வேளாண் துறை அமைச்சு பணியாளர் சங்க தலைவர் சீனிவாசராவ், வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் விஜய்ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement