மழைவிடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்: கலெக்டர் பிரதாப் அறிவிப்பு
திருவள்ளூர், அக்.31: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 22ம்தேதி கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை, ஈடு செய்யும் வகையில் (நவ.1ம்தேதி சனிக்கிழமை) நாளை அரசு, அரசு உதவிபெறும், ஆதி திராவிடர் நல பள்ளிகள், நகராட்சி தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement 
                
 
            
        