ஒருங்கிணைந்த போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
திருவள்ளூர், அக்.31: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு, திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடந்து வருகிறது. கட்டணமில்லாத இப்பயிற்சி வரும் நவ.5ம் தேதி காலை 10:30 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் துவங்கப்பட உள்ளது. இலவச மாதிரி தேர்வுகளும், மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மேலும், விபரங்களுக்கு 84898 66698, 96264 56509 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம். இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல், விண்ணப்பத்துடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
