தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் கடும் நெரிசல்: பார்க்கிங் கட்டணம் செலுத்த கட்டாயம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புலம்பல்

போரூர், செப்.30: சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் வாகனங்களுக்கான இலவச நேரம் கடந்துவிடுவதால் பார்க்கிங் கட்டணம் செலுத்துவதாக வாகன ஓட்டிகள் புலம்பல் தெரிவிக்கின்றனர். சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள், பயணிகளை இறக்கிவிட்டு 10 நிமிடங்களில், வெளியில் சென்று விட்டால், அந்த வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் கிடையாது. அதற்கு மேலாகும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும், பார்க்கிங் கட்டணங்கள் படிப்படியாக அதிகரிக்கும். இதனால் சென்னை விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்கள், அவசரஅவசரமாக பயணிகளை இறக்கிவிட்டு 10 நிமிடங்களில் வெளியில் செல்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டு, பார்க்கிங் கட்டணங்களில் இருந்து விலக்குகள் பெற்று வருகின்றன.

Advertisement

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, புறப்பாடு பகுதிகளில், பயணிகளை இறக்கி விடுவதற்கு வரும் வாடகை கார்கள், சொந்த கார்கள் உட்பட அனைத்து வாகனங்களும், பயணிகள் இறங்க வேண்டிய சர்வதேச முனையமான டெர்மினல் 2, உள்நாட்டு முனையமான டெர்மினல் 1, 4ல் பயணிகளை அவசரமாக இறக்கிவிட்டு, அந்த இலவச நேரமான 10 நிமிடங்களுக்குள் பார்க்கிங் கட்டணங்கள் இல்லாமல் விமான நிலையத்தை விட்டு வெளியேறி விடுவது வழக்கமாக உள்ளது.

10 நிமிடங்களுக்கு மேல், ஒரு வினாடி ஆனாலும், கார்களுக்கு முதல் 30 நிமிடங்களுக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.75, அடுத்த 30 நிமிடங்களுக்கு ரூ.110 என்று ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் கட்டணம் அதிகரித்துக் கொண்டு இருக்கும். வாகனங்கள் விமான நிலையத்திற்குள் நுழையும்போது, அங்கு உள்ள சோதனை சாவடியில், வாகனத்தின் எண், நேரம் அடங்கிய கம்ப்யூட்டர் சீட்டு கொடுப்பார்கள். அதன் பின்பு வெளியில் செல்லும் இடத்திலும், அங்குள்ள சோதனைச் சாவடியில், அந்த கம்ப்யூட்டர் சீட்டை வாங்கி பார்த்து, வாகனங்கள் உள்ளே இருந்ததற்கான நேரத்துக்கு தகுந்தாற்போல், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2023ம் ஆண்டு, 6 அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் முறை செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து, இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதோடு விமான நிலைய போர்டிகோ பகுதிகளிலும், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ரெக்கவர் வாகனம் ரோந்து வந்து, பயணிகளின் வாகனங்களை உடனே வெளியில் எடுத்துச் செல்லும்படி, தொடர்ந்து அறிவிப்புகளை செய்துகொண்டே இருப்பார்கள். இதனால் பெரும்பாலான வாகனங்கள், 10 நிமிடங்களுக்குள் வெளியில் சென்று விடுவதால், பார்க்கிங் கட்டணங்கள் செலுத்தாமல் சென்று கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் சமீப காலமாக, சென்னை விமான நிலையத்தில் ரோந்து வரும் ரெக்கவரி வேன் அதிகமாக வருவது கிடையாது. வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவிப்பும் இல்லை. இதனால் பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள், உடனடியாக அந்த இடத்தில் இருந்து செல்லாமல், நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பின்னால் வரும் வாகனங்கள், வெளியில் செல்ல வழி இல்லாமல், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. குறிப்பாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் வெளியே செல்வதற்கு தாமதம் ஆகிறது. பயணிகளை இறக்கிவிட்டு, 10 நிமிடங்களுக்குள் வெளியில் சென்று, பார்க்கிங் கட்டணத்தை தவிர்க்க வேண்டும் என்று அவசரமாக செல்லும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதோடு, வெளியில் செல்லும்போது 10 நிமிடங்கள் கடந்து விடுவதால், பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில வாகனங்களுக்கு அரை மணி நேரத்தையும் தாண்டி விடுவதால், பார்க்கிங் கட்டணம் ரூ.110 செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.

இதற்குக் காரணம் சென்னை விமான நிலையத்தின் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில், ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள்தான். எனவே சென்னை விமான நிலையத்திற்குள், வாகனங்கள், பின்னால் வரும் வாகனங்களுக்கு, வழிவிடாமல் இடையூறாக நிற்பதை தவிர்க்க வேண்டும். ரோந்து வாகனம் முன்புபோல் அடிக்கடி ரோந்து வந்து போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாமல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் விமான நிலைய பாதுகாவலர்கள், போலீசார் போக்குவரத்து நெரிசல்கள், ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நள்ளிரவு அதிகாலை நேரங்களில் இதுபோன்ற பிரச்னைகள் அதிக அளவு ஏற்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.

Advertisement