சிறுமி ஹாசினி பாலியல் கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு
சென்னை, நவ. 26: கடந்த 2017ம் ஆண்டு சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமி ஹாசினியை தஷ்வந்த் என்ற நபர் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமினில் வெளிவந்தார். அவ்வாறு ஜாமினில் வந்த தஷ்வந்த செலவுக்கு பணம் கொடுக்க மறுத்த அவரது தாயை கொலை செய்தார். இந்நிலையில் தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி பாலியல் கொலை வழக்கில் தஷ்வந்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீப்பளித்தது. அந்த தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனை தொடர்ந்து, மரண தண்டனை விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.அந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் காவல்துறை தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்க தவறிவிட்டதாகவும், குறிப்பாக DNA பகுப்பாய்வு அடிப்படையில் மட்டுமே தண்டனை வழங்ப்பட்டுள்ளதாக கூறி மரணதண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்ததோடு, தஷ்வந்தை உடனடியாக விடுவிக்கவும் கடந்த அக்டோபர் 8ம் தேதி உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது