தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி முருகன் கோயிலில் மறைந்த வள்ளி யானைக்கு ரூ.49.50 லட்சத்தில் மணிமண்டபம்: விரைவில் திறப்பு விழா

திருத்தணி,நவ.25: திருத்தணி முருகன் கோயிலில் இறந்த வள்ளி என்று அழைக்கப்பட்ட யானைக்கு ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட யானை சிற்பத்துடன் கூடிய மணிமண்டபம் பணிகள் முடிந்த நிலையில், விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. திருத்தணி முருகனுக்கு தெய்வானையுடன் திருமணத்தின்போது சீதனமாக தேவேந்திரன் ஐராவதம்(யானை) வழங்கியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முருகன் வாகனம் மயில் என்று போற்றப்பட்டாலும் திருத்தணி கோயிலில் மட்டும் முருகன் வாகனமாக யானை விளங்குகிறது. திருத்தணி முருகன் கோயிலில் முதல் ஐராவதம் யானையை வணங்கிய பின்புதான் முருகப்பெருமானை பக்தர்கள் தரிசிக்க செல்வது வழக்கம். எனவே, இக்கோயிலுக்கு கடந்த 1981ம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் சார்பில் வள்ளி என்று அழைக்கப்பட்ட பெண் யானை வழங்கப்பட்டது.

Advertisement

முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு வள்ளி யானை ஆசீர்வாதம் கொடுத்து வந்தது. விழாக்களில் உற்சவர் உலாவின் போது யானை ஊர்வலமாக அழைத்துச் செல்வது முருகன் கோயிலின் சிறப்பாக இருந்து வந்தது. கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி உடல்நலக்குறைவால் வள்ளி யானை உயிரிழந்தது. யானைக்கு நந்தி ஆற்றங்கரையில் முருகன் கோயிலின் உப கோயிலான ஆறுமுகசாமி கோயில் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டமன்றத்தில் வள்ளி யானைக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி யானைக்கு மணிமண்டபம் கட்ட ரூ.49.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிமண்டபம் கட்டுமான பணிகள் தொடங்கியது. 400 சதுர அடியில் யானை மணிமண்டபம் கட்டப்பட்டு யானை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மணிமண்டபம் பணிகள் முழுமை பெற்றுள்ள நிலையில் விரைவில் மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற உள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டப்பேடையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News