தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை புறநகரில் நெரிசலை குறைக்கும் வகையில் பூந்தமல்லி முதல் மதுரவாயல் வரை ரூ.1,250 கோடியில் 6 வழி மேம்பாலம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல்

பூந்தமல்லி, ஆக.21: ரூ.1250 கோடியில் பூந்தமல்லி முதல் மதுரவாயல் வரை 6 வழி மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை புறநகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, மதுரவாயல் முதல் பெரும்புதூர் வரை 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு, ரூ.3,780 கோடியில் 6 வழி உயர்மட்ட மேம்பால சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், மதுரவாயல் முதல் சென்னை வெளிவட்ட சாலை வரை முதல் கட்டமாகவும், வெளிவட்ட சாலை முதல் பெரும்புதூர் வரை இரண்டாவது கட்டமாகவும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

Advertisement

அதன்படி, முதல் கட்டமாக மதுரவாயல் முதல் சென்னை வெளிவட்ட சாலை வரை 6 வழி உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. இதன்படி, சுமார் 8.13 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.1,241 கோடி செலவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் டெண்டர் இறுதி செய்யப்பட்டு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முதல்கட்ட பணிகளை தொடங்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு, கிருஷ்ணகிரி மற்றும் வேலூரில் இருந்து சென்னைக்குள் நுழையும் வாகன ஓட்டிகளுக்கு இனி சிரமமில்லாத பயணம் காத்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பூந்தமல்லியில் இருந்து மதுரவாயல் வரை 8.1 கி.மீ நீளத்திற்கு 6 வழி மேம்பாலம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது நகருக்குள் நுழைவதை மேலும் விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேம்பால திட்டத்திற்கு ரூ.1,250 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர்கள் விடப்பட்டன. இந்த மேம்பாலத்தில் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் தொடக்க மற்றும் இறுதிப் புள்ளிகளில் மட்டுமே இருக்கும். இடையில் வேறு எங்கேயும் ஏறும் அல்லது இறங்கும் வசதிகள் இருக்காது. இது ஒரு சுங்கச்சாவடி வசதியுள்ள பாதையாகும்.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி கூறியதாவது: பூந்தமல்லி-மதுரவாயல் வழித்தடத்தில் தினமும் சராசரியாக 90,000 வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த திட்டம் மூன்று மாதங்களில் தொடங்கி இரண்டரை ஆண்டுகளுக்குள் முடிவடையும். ஒப்பந்ததாரர் முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டு பின்னர் சுங்கக் கட்டணம் மூலம் வசூலிப்பாரா அல்லது நெடுஞ்சாலை ஆணையம் முன்கூட்டியே செலுத்துமா என்பது இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இந்த மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். தற்போது சுமார் ஒரு மணி நேரம் ஆகும் பயண நேரம், எதிர்காலத்தில் 20 நிமிடங்களுக்கும் குறைவாக இருக்கும்.

இந்த மேம்பாலம் எதிர்காலத்தில் மற்றொரு 13 கி.மீ நீள மேம்பாலத்துடன் இணைக்கப்படும். இது வெளிவட்டச் சாலை மற்றும் பெரும்புதூர் பகுதி இணைக்கப்பட உள்ளது. சரக்கு வாகனங்கள் விரைவாக துறைமுகத்தை அடைய முடியும் என்பதால், சரக்குகள் கையாளும் திறன் மேலும் மேம்படுத்தப்படும். மேலும் இந்த மேம்பாலத்தை பெரும்புதூரில் உள்ள சென்னை-பெங்களூரு விரைவு சாலையின் இணைப்பு புள்ளியுடன் விரைவில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் தொடங்கும்போது மக்கள் சேவை சாலைகளை அதிகம் பயன்படுத்துவார்கள் என்பதால் அவை முழுமையாகச் சீரமைக்கப்பட உள்ளது. 3 ஆண்டுகளுக்குள் கட்டுமான பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை 2026ன் இறுதிக்குள் முடிவடைய உள்ளதால், அதற்குள் இந்த மேம்பாலப் பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Advertisement

Related News