ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது
போரூர், நவ.18: சென்னை தரமணி 200 அடி சாலையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தரமணி நடைமேம்பாலத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 4 வாலிபர்களை பிடித்து, அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 20 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தரமணியை சேர்ந்த லோகேஷ் (24), விக்கி (27), லோகநாதன் (19), நித்யானந்தம் (19) என்பதும், இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்தனர்.
Advertisement
Advertisement