மீஞ்சூர் ஒன்றியத்தில் ரூ.1.18 கோடியில் திட்டப் பணிகள்
பொன்னேரி, ஆக.15: மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லூர், அனுப்பம்பட்டு ஊராட்சி அரசுப் பள்ளியில் சமையல் கூடம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை கட்டிடம் மற்றும் அனுப்பம்பட்டு ஊராட்சியில் அனுப்பம்பட்டு முதல் உத்தண்டிகண்டிகை வரை ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் தார் சாலை உள்ளிட்ட பணிகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்எஸ்கே ரமேஷ்ராஜ், துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, அவைத்தலைவர் பகலவன், நிர்வாகிகள் குணசேகரன், கதிரவன், ஆனந்தகுமார், சந்திரசேகர், வல்லூர் தமிழரசன், ராமமூர்த்தி, வேலுமணி, சந்தோஷ், சாந்தி, கனகா, மகேஸ்வரி கதிரா உள்ளிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.