தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வருண பகவான் கருணையால் கனமழை சரவண பொய்கை குளத்தில் வேகமாக உயரும் நீர்மட்டம்: கோயில் நிர்வாகம், பக்தர்கள் மகிழ்ச்சி

திருத்தணி, ஆக. 12: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சரவண பொய்கை குளத்தில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில் வரும் வியாழக்கிழமை அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கி 5 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. சனிக்கிழமை ஆடிக்கிருத்திகையொட்டி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் திருத்தணி முருகன் கோயிலில் குவிந்து காவடிகள் செலுத்தி சாமி தரிசனம் செய்ய உள்ளனர். அன்று மாலை மலை அடிவாரத்தில் சரவண பொய்கை திருக்குளத்தில் முதல் நாள் தெப்பத் திருவிழா தொடங்கி, தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது. முருகப்பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக் குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த சில ஆண்டுகளாக தெப்ப குளம் தூர்வாரி சீரமைக்காததால், தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் பக்தர்கள் குளிக்க முடியாமல் அவதி அடைந்தனர்.

திருக்கோயில் பெரும் முயற்சியால் உபயதாரர்கள் உதவியுடன் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. டேங்குகள் மூலம் குளத்தில் தண்ணீர் நிரப்பினாலும் 4 படிகள் வரை மட்டுமே தண்ணீர் நிரம்பியிருந்தது. இதனால் தெப்பம், குளத்தை சுற்றி வரும்போது பாரம் அதிகரித்தால், தரைதட்டும் என்ற அச்சம் நிலவியது. குளத்தில் தண்ணீர் அளவு உயர வருண பகவான் கருணை வைக்க வேண்டும் என்று முருக பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருத்தணி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் முருகன் கோயில் மலையிலிருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சரவண பொய்கை திருக்குளம் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்றும் மழை பெய்தது. தெப்பத் திருவிழாவிற்கு 4 நாட்கள் உள்ளதால் குளம் மேலும் நிரம்பி தடையின்றி தெப்பத்தில் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளதால், முருக பக்தர்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.