ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் புகைப்படம் திறந்து பெரியாருக்கு மணிமகுடம் சூட்டியுள்ளார் முதல்வர்: அமைச்சர் நாசர் பேச்சு
திருவள்ளூர், செப்.11: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் பூந்தமல்லி மோட்டல் ஹைவேயில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் மா.ராஜி தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, கே.ஜெ.ரமேஷ், தொகுதி பார்வையாளர்கள் பி.டி.சி.செல்வராஜ் நிவேதாஜெசிகா, மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு இணை செயலாளர் சி.ஜெரால்டு, மாவட்ட துணைச் செயலாளர்கள் சீனிவாசன், ஜெயபாலன், காயத்திரி ஸ்ரீதர், மாவட்ட பொருளாளர் பா.நரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் எத்திராஜ், ராஜேந்திரன், விமல்வர்ஷன், முத்தமிழ்செல்வன், குமார், மகாதேவன், காஞ்சனாசுதாகர், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ் வரவேற்புரை ஆற்றின்ர்.
மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஆவடி சாமு.நாசர் ஆலோசனை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், இந்த ஆண்டு திமுக முப்பெரும் விழா கரூரில் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. விழாவில் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். முதல்வர் ஜெர்மனிக்கு, இங்கிலாந்துக்குச் சென்று ரூ.13 ஆயிரம் கோடிக்குமேல் புரிந்துணர்வு மேற்கொண்டு பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்துள்ளார். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பெரியாரின் புகழை உலகெங்கும் பரப்பிடும் வகையில், அவருக்கு மணிமகுடம் சூட்டியுள்ளார் என்றார். இதில் ஆவடி மேயர் ஜி.உதயகுமார், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் சன்பிரகாஷ், டி.தேசிங்கு, ஆர்.ஜெயசீலன், ஜி.ஆர்.திருமலை, பிரேம் ஆனந்த், தி.வை.ரவி, என்.இ.கே.மூர்த்தி, முரளிகிருஷ்ணன், தங்கம்முரளி, பேபிசேகர், பொன்.விஜயன், ஜி.நாராயண பிரசாத், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சுரேஷ் குமார், தியாகராஜன், சங்கீத சீனிவாசன், பவுல், சௌந்தரராஜன், விமல்ஆனந்த், ஏ.ஜி.ரவி, பரிமேலழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி நன்றி கூறினார்.