ஆர்.கே.பேட்டையில் ரூ.6.69 கோடியில் தார்சாலை: எம்எல்ஏ தொடங்கிவைத்தார்
ஆர்.கே.பேட்டை, ஆக. 4: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சமத்துவபுரம் கிராமத்தில் இருந்து கொண்டாபுரம் கிராமம் வரை 4 கிமீ சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி மாநிலங்களுக்கான சிறப்பு உதவித்திட்டத்தின் கீழ் ரூ.3.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து எம்எல்ஏ சந்திரன், பூஜை செய்து தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதேபோல், வங்கனூர் கிராமத்தில் இருந்து சி.ஜி.என்.கண்டிகை வரை செல்லும் சாலையும் பழுதடைந்து காணப்பட்டது. இந்த சாலையையும் சீரமைக்க ரூ.3.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து தார்சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஆர்.கே.பேட்டை ஒன்றிய செயலாளர்கள் செல்லாத்தூர் சம்பத், சி.என்.சண்முகம், பழனி, ரகு மற்றும் நிர்வாகிகள் திருவேங்கடம், வெங்கடேசன், நாகப்பன், டில்லிபாபு, சத்திராஜ் உட்பட பலர் கலந்துகொண்
டனர்.