பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்
பெரியபாளையம், ஆக. 1: பெரியபாளையம் சுற்றுப்பகுதிகளில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கன்னிகைப்பேர் கிராமத்திற்கு அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சுமார் 8 அடி உயரத்திற்கு தண்ணீர் மேலே பீய்ச்சி அடிக்கப்பட்டு வீணாக வெளியேறி வருகிறது. கோடைக்காலம் முடிந்தும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் குடிநீர் வீணாக சாலையில் பாய்ந்து ஓடுவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக குடிநீர் வாரிய அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுத்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.