உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு பயறு வகைகள்
திருவள்ளூர், ஜூலை 25: திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூண்டி ஒன்றியம், கைவண்டூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநர் பால்ராஜ், வட்டாட்சியர் (பொ) பரமசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுலோச்சனா, செல்வி, வட்டார மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், பூண்டி வேளாண்மை உதவி இயக்குநர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கலெக்டர் மு.பிரதாப் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு, வேளாண்மைத்துறை சார்பில் பயறு வகைகள், விதை தொகுப்பு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
இந்நிகழ்வில் மண்டல துணை வட்டாட்சியர் தினேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூபதி, கார்த்திகேயன், பழனி, மகேஸ்வரன், பூர்ணிமா, வருவாய் ஆய்வாளர் பிரியங்கா, கிராம நிர்வாக அலுவலர் தயாநிதி, உதவி வேளாண்மை அலுவலர் திவ்யா, வட்டார தொழில் நுட்ப அலுவலர் சுனில் குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் மலர்கொடி, உதயகுமார், சிவானந்தம், திமுக மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் நேதாஜி, மோதிலால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.