புதிதாக தொடங்கிய கட்சியில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பதவியேற்றார்
ஆவடி: புதிதாக தொடங்கிய தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பதவியேற்றார். முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு தினத்தில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி, கட்சிக்கொடி அறிமுகம் செய்து வைத்தார். இந்தநிலையில் ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியில் உள்ள ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அந்த கட்சிக்கு பொதுச்செயலாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். மாநில தலைவராக மைக்கேல் தாஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாநில பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.