கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் தென்மண்டல சிலம்ப போட்டி
கோவில்பட்டி, மே 20: கோவில்பட்டி உண்ணாமலை கலைக்கல்லூரி வளாகத்தில் தென்மண்டல அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை வகித்தார். பேராசிரியர் மகாராஜன் முன்னிலை வகித்தார். போட்டியை டிஎஸ்பி ஜெகநாதன் தொடங்கி வைத்தார். இதில் மதுரை, விருதுநகர்,தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் எட்டயபுரம் பாரதி சிலம்பம் பவுண்டேஷன் மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். 2வது இடத்தை தூத்துக்குடி கணேஷ்கா சிலம்பாட்ட பயிற்சி கழக மாணவர்களும், 3வது இடத்தை கோவில்பட்டி அனைத்து விளையாட்டு சங்க மாணவர்களும், 4வது இடத்தை தூத்துக்குடி ஞானம் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்களும், 5வது இடத்தை நாலாட்டின்புதூர் எஸ்எப்எஸ் பள்ளி மாணவர்களும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவர் தாமோதரன் பரிசுக்கோப்பைகளை வழங்கி வாழ்த்தினார். ஏற்பாடுகளை அனைத்து விளையாட்டு சங்க நிறுவனர் காசி மாரியப்பன் செய்திருந்தனர்.