கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
சின்னமனூர், அக். 31: சின்னமனூர் ஒத்த வீடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (40), கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாக்கியம் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பெண்ணை மாரியப்பன் இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதீஸ்வரன் என்ற மகன் உள்ளார்.
மாரியப்பன் தினமும் குடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றார். மாரியப்பன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். சம்பவத்தன்று மகனைப் பார்ப்பதற்காக அவரது தந்தை மலையாண்டி வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு பூட்டிக் கிடந்தது.
ஜன்னல் வழியாக பார்த்தபோது பேன் கொக்கியில் தூக்கில் தொங்கியபடி மாரியப்பன் பிணமாகக் கிடந்தார். தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாரியப்பன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
