க. புதுப்பட்டி பேரூராட்சியில் வார்டு சபா கூட்டம்
உத்தமபாளையம், அக்.30: க.புதுப்பட்டி பேரூராட்சியில் நடந்த வார்டு சபா கூட்டத்தில், கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. உத்தமபாளையம் க.புதுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் வார்டு சபா கூட்டம் நடைபெற்றது. இதில் வார்டுகளில் உள்ள வீடுகளின் கழிவுநீர் முறையாக செல்ல சாக்கடை வசதி, அனைத்து தெருக்களிலும் உள்ள கழிவு நீர் கால்வாய்களை ஆழப்படுத்துதல், சாக்கடை குறைவாக உள்ள இடங்களில் மழைகாலங்களில் கழிவுநீர் சாலைகளில் நிரம்பி வீடுகளுக்கு செல்லும் வார்டுகளை கண்டறிதல், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவாக தரப்பட்டன. கோரிக்கை மனுவினை செயல் அலுவலர் இளங்கோவன் பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் சம்பந்தப்பட்ட வார்டுகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement